என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இழப்பீட்டு தொகை"
- சுமார் 40 மெட்ரிக் டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன
- காலம் தாழ்த்தாமல் இழப்பீடு தொகையினை விரைவாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் :
வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம் கன்னியாகுமரி ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனம் குலசேகரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் ரப்பர் உற்பத்தியாளர் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் அமைந்துள்ள ரப்பர் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த சுமார் 40 மெட்ரிக் டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. இதனை அறிந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்த ரம் நேரில் சென்று பார்வை யிட்டார்.
இங்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்களை, குமரி மாவட்ட ரப்பர் உற்பத்தியாளர் நிறுவ னத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் பி.எஸ்.பிரதிப்குமார், பொருளாளர் மோகனகுமார் ஆகியோர் எடுத்து கூறினார்கள். பின்னர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத் தில் 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் உற்பத்தி செய்யப்படு கிறது. குமரி மாவட்டம் குலசேகரத்தில் உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலக தரம் வாய்ந்த சிறப்புக்குரிய தாகும். இந்நிலையில் குலசேகரம் ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகளின் ரப்பர் சீட்டுகள் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் மொத்த ரப்பர் ஷீட்டுகள் 26,466 எண்ணமும், இதன் தோராய மான எடை 18,526.200 கிலோ கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.27,41,877 ஆகும். வியாபாரிகளின் ரப்பர் ஷீட்டுகள் 29,307 கிலோ கிராம், இதன் மதிப்பு ரூ.42,49,515 ஆகும். மொத்தம் சேதமடைந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு ரூ. 69 லட்சத்து 91 ஆயிரத்து 392 ஆகும். மேலும் ரப்பர் ஷீட்டு அடிக்கும் எந்திரங்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. இதன் வாயிலாக ஆக மொத்தம் சுமார் ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகளுக்கு காலம் தாழ்த்தாமல் இழப்பீடு தொகையினை விரைவாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம், ஒன்றிய செயலாளர்கள் சுதர்சன், நிமால், ஜீன்ஸ், கடையால் மணி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் உடன் சென்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
- சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மூலம் விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மா சீசன் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அளிக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதே போல், மா அறுவடைக்காலங்களில் அதிகளவில் மாங்காய்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மா திருட்டுத்தனமாக அறுவடை செய்து சிலர் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஏற்கனவே விளைச்சல் பாதிப்பு உள்ளிட்டவையால் பாதிக்கப்படும் மாவிவசாயிகள், மாங்காய்கள் திருடப்படுவதால், மேலும், இழப்பினை சந்திக்கின்றனர். எனவே, இரவில் மா பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வியாபாரிகள் விவரங்கள் தொடர்புடைய போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 860 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது. 8 வங்கிகளுக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, ஒரே எண்ணாக பதிவு செய்ததால், விவசாயிகளின் வங்கி கணக்கு இழப்பீடு தொகை வராமல், மீண்டும் சென்றுவிட்டது. இதில், அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும். கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்கள் தூர்வாரி பராமரிக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும். கால்நடை உலர் தீவனங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுகுக வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை வாரத்தின் 3 நாட்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-
மா விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கு சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை பெற்று தரப்படும். மயில்களால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு நிலம் அளித்த பட்டாதாரர்கள் இழப்பீட்டு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம் உப்பூர் அனல் மின் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், சோளந்தூர் உள்வட்டத்தில் அமைந்துள்ள வளமாவூர், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய வருவாய் கிராமங்களில் உப்பூர் அனல் மின்நிலையம் அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க ப்பட்டது.
பட்டா தாரர்களுக்கு 3 முறை முறையான அழை ப்பாணை அனுப்பியும், கிராமங்களில் முகாம்கள் நடத்தியும் 110 பட்டா தாரர்கள் ஆஜராகி உரிய ஆவணங்கள் செலுத்தி இழப்பீட்டுத் தொகை பெற முன்வர வில்லை.
வளமாவூர் கிராமத்தில் 42 பட்டாதா ரர்களுக்கு ரூ.1,97,03,163 இழப்பீட்டு த்தொகையும், திருப்பா லைக்குடி கிராமத்தில் 7 பட்டாதா ரர்களுக்கு, ரூ.10,59,678 இழப்பீ ட்டுத்தொ கையும், உப்பூர் கிராமத்தில் 61 பட்டா தாரர்களுக்கு, ரூ.2,00,30,127 இழப்பீட்டு த்தொகையும் தரப்பட வேண்டியு ள்ளது. மேற்படி பட்டாதாரர்களோ, அல்லது அவர்களின் வாரிசு தாரர்களோ இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் சம்மந்த ப்பட்ட பட்டாதாரர்களது இழப்பீட்டுத்தொகை வைப்பீடு செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிலம் கொடுத்தவர்கள் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண். 7-ல் பெங்களூர்-சேலம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக வாடிப்பட்டி வட்டத்தில், தும்பிச்சாம்பட்டி, தாதம்பட்டி, குலசேகரன்கோட்டை, தேனூர், தனிச்சியம் கிராமங்களும், மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக மதுரை தெற்கு வட்டத்தில் வடிவேல்கரை, பரவை பிட்-2, சமயநல்லூர் , தனக்கன்குளம், தட்டானூர், தோப்பூர், துவரிமான், விளாச்சேரி பிட்-1 கிராமங்களிலும், திருமங்கலம் வட்டத்தில், கப்பலூர், கொக்குலாஞ்சேரி, மறவன்குளம், மேலக்கோட்டை, நல்லமநாயக்கன்பட்டி, பழக்காபுதுப்பட்டி, செங்குளம், சிவரக்கோட்டை, உச்சப்பட்டி, குதிரைசாணிகுளம், கே.வெள்ளாகுளம், வேங்கிடசமுத்திரம் ஆகிய கிராமங்களிலும் நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நில உரிமையாளர்களில் ஒரு சிலர் இழப்பீட்டுத் தொகையை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நிலஉரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவர்களுக்கு பாத்தியப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள் முபரக் பாஷா, தர்குனிஷா. பாலுச்செட்டிசத்திரத்தை சேர்ந்தவர் மும்தாஜ்பேகம், வாலாஜாபாத்தை சேர்ந்தவர் நிஷார் அகமது. இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்கக்கோரி அவர்களது சார்பில் காஞ்சீபுரம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு உடனடியாக அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 574 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் தாமதம் செய்து வந்தது.
இதையடுத்து திருப்பதி-புதுச்சேரி ரெயில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் வாகனம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் மற்றும் கலெக்டர் அலுவலக அசையா சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த திருப்பதி - புதுச்சேரி ரெயிலில் ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். இது போன்ற இழப்பீட்டு தொகை பிரச்சினையில் பஸ்சை அதிகாரிகள் ஜப்தி செய்வார்கள். ஆனால் ரெயிலை ஜப்தி செய்வதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரெயில்வே ஊழியர்கள் இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
கலெக்டரின் வாகனம், வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் இல்லாததால் அவற்றை ஜப்தி செய்யவில்லை. #TrainConfiscation #KanchipuramRailwayStation
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2016-17-ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் காலத்தே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விரைந்து கணிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.4.2017 அன்று தொடங்கி வைத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன் அடிப்படையில், 2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரத்து 495 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட இதர தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, காப்பீட்டு நிறுவனங்களால் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ரூ.453 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் அரணாக இந்த அரசு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மமானி(32). இவரது கணவர் கடந்த மாதம் சாலை விபத்தில் பலியானாதால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் மாமனிக்கு இரண்டு லட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்தது. இதற்கிடையே, மமானி மற்றும் அவரது இரு மகள்கள் வர்ஷா(10), திஷா(8) மற்றும் மகன் முனா(5) ஆகியோர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த 10-ம் தேதி, மகாநதி ஆற்றில் மிதந்த அவர்களின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
ஆரம்பத்தில், இந்த மரணங்களை தற்கொலை என போலீசார் சந்தேகித்தனர். ஆனால் மமானி மற்றும் அவரது குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மமானியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கிய போலீசார் மமானியின் தந்தை அக்ஷயா சேத்தியை இன்று கைது செய்தனர். இழப்பீட்டு தொகையான இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அக்ஷயா தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #OdishaMurder
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்